ராமகிருஷ்ண மடம் துறவிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

09.08.23 06:06 AM - By puducherry

புதுச்சேரி, ஆக. 9- 

ராமகிருஷ்ண மடத்தின் துறவிகள், ஜனாதிபதியை சந்தித்து பேசினர். 

புதுச்சேரி ராமகிருஷ்ண மடத்தை சேர்ந்த சுவாமி ஆத்மகனானந்த மகராஜ், சுவாமி நரவரானந்த மகராஜ் ஆகியோர், புதுச்சேரிக்கு வருகை தந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேற்று முன் தினம் சந்தித்து பேசினர்.

அப்போது, ராமகிருஷ்ண மடம் சார்பில் புதுச்சேரியில் மேற்கொள்ளப்பட உள்ள பல்வேறு சேவை பணிகள் குறித்து விளக்கி கூறினர்.

மனிதாபிமான சேவைகளுக்கு ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ணா மிஷனை சேர்ந்தவர்கள் பெயர் பெற்றவர்கள்; அதை நல்ல முறையில் தொடர்ந்து செய்ய வேண்டும் என ஜனாதிபதி கேட்டுக் கொண்டார். புதுச்சேரி திட்டத்திற்கு தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

puducherry